மத்தேகொட பகுதி ஹோட்டல் ஒன்றில் குடித்து விட்டு வீதியில் கூச்சலிட்டுத் திரிந்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களை மத்தேகொட பொலிசார் கைது செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண்ணொருவரையும் இழிவாகப் பேசித் தூற்றியிருந்த நிலையில் மத்தேகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் பின்னணியில் இக்கைது இடம்பெற்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பொலிசார் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்து அடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment