அண்மையில் அட்டுலுகம பகுதியில் பொலிசார் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கொட்டுகொல ரிபாய் என அறியப்படும் முஹமது ஷரீப் ரிபாய் எனும் (50) நபர் பண்டாரவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மாரவ பகுதியில் பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருந்ததன் பின்னணியில் ஏலவே ஒன்பர் பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
எனினும், சூழ்நிலையைப் பயன்படுத்தித் தப்பியோடியதாகக் கூறப்பட்ட ரிபாய் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment