இரு மாகாணங்களுக்கிடையில் வாகனங்களை விற்பனை செய்வோர் தமது பழைய வாகன இலக்கத் தகட்டை ஒப்படைத்து புதிய இலக்கத் தகட்டைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை மாற்றி, இனி வரும் காலங்களில் புதிய வாகன இலக்கத் தகட்டினை வீட்டிற்கே தபாலில் அனுப்பி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பழைய வாகன இலக்கத் தகட்டினை வேறு யாருடைய கைக்கும் சென்று சேராத வகையில் பாதுகாப்பான முறையில் இல்லாதொழிக்க வேண்டியது பாவனையாளரின் கடமையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நீண்ட வரிசைகளில் காத்திருப்பது மற்றும் பழைய தகடுகள் குவிவதைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment