ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை சீர்படுத்தும் நோக்கில் தனிப்பட்ட ரீதியில் தான் ரணில் விக்கிரமசிங்கவைக் கண்டு அளவளாவியதாக தகவல் வெளியிட்டுள்ளார் சமகி ஜன பல வேகய தேசியப்பட்டியல் உறுப்பினரும் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க.
இரு தரப்பு முரண்பாடுகளைக் களைவதோடு மக்கள் தீர்ப்பை மதித்து ஒற்றுமைப்படுவதன் அவசியம் குறித்துத் தான் விளக்கியபோதிலும் ரணில் விக்கிரமசிங்க 'யோசிக்கிறேன்' என்று கூறி மழுப்பல் பதிலையே வழங்கியதாக அவர் தெரிவிக்கிறார்.
35 வருடங்களாக ரணில் விக்கிரமசிங்கவுடன் பணியாற்றிய அனுபவத்தில் அவர் எப்போதும் கேள்விகளை அலட்சியப்படுத்தக்கூடியவர் என்பதைத் தெரிந்து கொண்டே தான் இம்முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment