போதைப் பொருள் கைவசம் வைத்திருந்த குற்றத்தின் பின்னணியில் இரு விமானப்படையினர் மற்றும் ஒரு பெண் உள்ளடங்கலாக மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
பாதுக்க பொலிசார் இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ள அதேவேளை குறித்த நபர்கள் கைவசம் 390 கிராம் ஹெரோயின் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக படையினர் பலர் இவ்வாறு கைது செய்யப்பட்டு வருகின்றமையும் போதைப் பொருள் வியாபாரத்தில் பங்கெடுத்த குற்றச்சாட்டுக்குள்ளாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment