பூசா முகாமில் உள்ள பிரபல பாதாள உலக பேர்வழிகள் ஏற்பாடு செய்திருந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுடன் எதுவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப் போவதில்லையென பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்த அதேவேளை நான்கு தினங்களின் பின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளது.
வெலே சுதா, சூசை, கெவுமா, கஞ்சிபானை இம்ரான் போன்றோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அதேவேளை பொட்ட நௌபர், ஆமி சம்பத் போன்றவர்கள் அதனை நிராகரித்திருந்ததாகவும் சிறைச்சாலை நிர்வாகம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment