பூசா முகாமில் வெலே சுதா, கஞ்சிபானை இம்ரான், சூசே போன்ற முக்கிய பாதாள உலக பேர்வழிகள் இணைந்து உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.
எனினும், இடையில் கஞ்சிபானை இம்ரானை கடற்படை வைத்தியசாலைக்கு மாற்றியிருந்த நிலையில் தொடர்ந்தும் சுமார் 28 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குற்றவாளிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாரில்லையென அரசு தெரிவிக்கின்ற அதேவேளை, தமக்கும் தம்மைப் பார்க்க வரும் சட்டத்தரணிகளுக்கும், உறவினர்களுக்கும் மேலதிக சோதனைகள் என்ற பேரில் நடக்கும் அநீதிகளை நிறுத்துமாறு கைதிகள் கோரிக்கை வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment