நேற்றிரவு இரத்மலானை, கொதலாவல புர பகுதியில் இடம்பெற்ற சமகி ஜன பல வேகய பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச பேச ஆரம்பித்த வேளையில் கல் வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
எனினும், இதற்கெல்லாம் தாம் அச்சப்படப் போவதில்லையெனவும் அவ்வாறு செய்பவர்கள் யார் எனத் தெரியும் எனவும் தெரிவித்த சஜித் தனது உரையைத் தொடர்ந்துள்ளார்.
பாதுகாப்பு பிரிவினர் உடனடியாக மேடையில் சஜித்தின் பாதுகாப்புக்காக சுற்றி நின்ற அதேவேளை ஹிருனிகா உட்பட கட்சி முக்கியஸ்தர்களும் இவ்வேளையில் மேடையிலிருந்துள்ளனர்.
No comments:
Post a Comment