நீதிமன்றில் உள்ள வழக்கொன்றின் விபரம் பற்றிய கேள்வி - பதிலின் போது சபையில் நீதியமைச்சர் ஆவேசப்பட்டுப் பின் அடங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மருத்துவர் ஷாபியின் வழக்கில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகள் தொடர்பில் கேள்வியெழுப்பப் பட்ட போது, நாட்டில் உள்ள 7 லட்சத்துக்கு அதிகமான வழக்குகளுக்காக எந்த சட்டத்தரணி ஆஜராகிறார் என்ற விபரம் நீதியமைச்சருக்குத் தெரியாது எனவும் அது தொடர்பில் தேவையான கட்டணத்தை செலுத்தி நீதிமன்றில் அறிந்து கொள்ள முடியும் எனவும் நீதியமைச்சர் பதிலளித்திருந்தார்.
எனினும், தொடர்ந்தும் கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் 20 ம் திருத்தச் சட்டம் நிறைவேற்ற பின்னர் 'கோர்ட் - சூட்' அணிந்த இந்த நீதியமைச்சர் கடந்த அரசு பற்றி தெரிவித்த கருத்துக்களையும் இந்த அரசு பற்றி எடுக்கப் போகும் நிலைப்பாட்டையும் தாம் பொறுத்திருந்து அவதானிக்கப் போவதாக தெரிவித்ததையடுத்து, யாரும் சொல்வது போன்றும் யாருடைய தேவைக்காகவும் தனது ஆடைத் தெரிவை மாற்ற அவசியமில்லையெனவும், இனவாத நோக்கில் தன்னை நோக்கி இப்படிப் பேசுவதாகவும் அலி சப்ரி ஆவேசப்பட்டு கருத்து வெளியிட்டிருந்தார்.
எனினும், அமைச்சர் என்ற வகையில் பொறுமையாக பதிலளிக்க வேண்டியது அவசியம் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், பின்னர் தான் ஆவேசப்பட்டது குறித்து நீதியமைச்சர் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
உலகின் எந்த நாட்டிலும் பாராளுமன்றம்தான் அதிமுக்கியமான இடம்; மதிப்புக்குரிய இடம். ஏனைய இடங்களில் பேசுவதுபோல் யாரும் அங்கு சென்று பேச முடியாது. மிகவும் அவதானமாகவே பேசுதல் வேண்டும். ஆடைஅணிகலன்களும் விதிமுறைக்கேற்பவே அணிதல் வேண்டும். அதனை யாருக்காகவும் மாற்ற முடியாது.
Post a Comment