நாட்டில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்தி, அனைத்து பாடசாலைகளுக்கும் சம அளவிலான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
சில பாடசாலைகளுக்கு போதிய வசதிகள் இல்லையென்பதும் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் நலன் தொடர்பிலான அரசின் பல்வேறு நடவடிக்கைகளுள் ஒன்றாக தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று அதிபர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment