ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இலங்கையில் ஆறு அமைப்புகளைத் தடை செய்வதற்குப் பரிந்துரை செய்யப்பட்டும் அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத், சிலோன் தவ்ஹீத் ஜமாத் ஆகிய பெயர்களில் இயங்கும் அமைப்புகள் தடை செய்யப்படாதது ஏன் என ஜனாதிபதி ஆணைக்குழுவில் கேள்வியெழுப்பப் பட்டுள்ளது.
தேசிய புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் சிசிர மெண்டிசிடமே ஜனாதிபதி விசாரணைக் குழு இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ள நிலையில் இது குறித்து பதிலளித்த அவர், அரச புலனாய்வுத்துறையினரே அதற்கான தீர்மானத்தை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
எனினும், பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த குழுக்கள் என்ற அடிப்படையில் இவ்வமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளனவா? என வினவப்பட்ட போது அது குறித்து தம்மிடம் பதிலில்லையென மென்டிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த அமைப்புகளால் அபாயம் இருப்பதாக முன்னர் அறிக்கைகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் எனினும் சஹ்ரானைக் கைது செய்வதையே முற்படுத்தியதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment