ஐந்து வருடங்கள் பதவியில் இருப்பதை விடுத்து இடையில் தான் ஓய்வு பெறப் போவதில்லையென தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
இன்னும் இரண்டு வருடங்களில் பிரதமர் ஓய்வு பெறப் போவதாக அவருக்கு மிக நெருங்கிய சகாவான விமல் வீரவன்ச தரப்பு தகவல் வெளியிட்டிருந்ததையடுத்து இவ்விடயம் பேசு பொருளாகியுள்ளது.
இந்நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ள மஹிந்த, தன்னை மக்கள் ஐந்து வருடங்களுக்குத் தெரிவு செய்துள்ள நிலையில் இடையில் ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment