கொரோனா தொற்றின் இரண்டாவது சுற்று குறித்து உலகளாவிய ரீதியிலான அவதானம் அதிகரித்து வரும் நிலையில் நியுசிலாந்தில் மூன்று மாதங்களின் பின் முதலாவது மரணம் நிகழ்ந்துள்ளது.
இறுதியாக மே மாதம் 24ம் திகதியே நியுசிலாந்தில் கொரோனா மரணம் நிகழ்ந்திருந்த நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தது.
எனினும், தற்போது கடந்த மாத இறுதியிலிருந்து இரண்டாவது சுற்று தொற்று அவதானிக்கப்படும் நிலையில் இம்மரணம் நிகழ்ந்துள்ளதுடன் மீண்டும் செப்டம்பர் நடுப்பகுதி வரை கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment