ஜித்தா இலங்கைத் தூதரகம் 25 முதல் மீண்டும் இயங்கும் - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 September 2020

ஜித்தா இலங்கைத் தூதரகம் 25 முதல் மீண்டும் இயங்கும்



தற்காலிகமாக மூடப்பட்டுள்ள, சவுதி அரேபியா, ஜித்தாவில் இயங்கும் இலங்கைத் தூதரகம் 25ம் திகதி முதல் மீண்டும் இயங்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


தூதரக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்தே இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 25ம் திகதி முதல் மீண்டும் தூதரகம் இயங்கும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


ஏலவே இலங்கை திரும்பிய தூதரக ஊழியர் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment