ஜனநாயக உரிமைகளை நசுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள 20ம் திருத்தச் சட்டத்தினை எதிர்க்கட்சியான சமகி ஜனபல வேகய எதிர்ப்பதாக தெரிவிக்கிறார் லக்ஷ்மன் கிரியல்ல.
20ம் திருத்தச் சட்டத்தின் வரைபு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 19ம் திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சம் அரசியலமைப்பு சபை எனவும் அதையும் நீக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கிரியல்ல விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment