20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆராய்ந்தே முடிவெடுக்கும் எனவும் அக்கட்சியின் 14 உறுப்பினர்களின் ஆதரவின்றி அரசுக்கு நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்காது எனவும் தெரிவிக்கிறார் கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகர.
19ம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு மக்கள் ஆணை கிடைத்திருப்பினும் கூட, 20ம் திருத்தச் சட்டத்தில் சில விடயங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் தயாசிறி தெரிவிக்கிறார்.
குறிப்பாக, ஜனாதிபதிக்கு எதிராக நீதித்துறையை நாட முடியாத வகையில் சட்டம் உருவாக்குவது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment