ஜனாதிபதியிடம் முழுமையான அதிகாரங்களைக் குவிக்கும் வகையில் 20ம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அது நிறைவேறப்படினும் கூட தான் பொம்மை பிரதமராக இருக்கப் போவதில்லையென்கிறார் மஹிந்த ராஜபக்ச.
19ம் திருத்தச் சட்டத்தின் பின்னர் நிறைவேற்று அதிகாரத்தை பிரதமரிடம் மாற்றிக்கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீண்டும் ஜனாதிபதியிடமே முழுமையான நிறைவேற்று அதிகாரத்தை மாற்றிக் கொள்ள பெரமுன அரசு முயன்று வருகிறது.
இந்நிலையில், பிரதமராக பதவி வகிக்கும் மஹிந்தவின் வகிபாகம் என்ன என்பது குறித்து பல்வேறு மட்டங்களில் கேள்வியெழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment