20ம் திருத்தச் சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றும் தேவையில் இருக்கும் அரசாங்கம் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பெரமுனவின் பங்காளி கட்சிகள் தமக்கான 'பதவிகள்' கிடைக்கப் பெறவில்லையென அதிருப்தி வெளியிட்டு வருவதுடன் உத்தேச திருத்தச் சட்டத்தின் வரைபில் பல்வேறு குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி வருகின்றன.
இந்நிலையில், அமைச்சரவையில் சில புதிய முகங்கள் எதிர்பார்க்கப்படுகின்றமையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் தனிப்பட்ட ரீதியில் அரசுடன் இணைந்து கொள்ள முயற்சி செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment