அரசாங்கம் முழு மூச்சாக நிறைவேற்ற முனையும் 20ம் திருத்தச் சட்டத்தின் வரைபினை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார் நீதியமைச்சர் அலி சப்ரி.
19ம் திருத்தச் சட்டம் ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதாகவும் அவ்வாறு நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் ஆளுந்தரப்பு தெரிவிக்கிறது. இதேவேளை, இரட்டைக் குடியுரிமையுள்ளவர்களை நாடாளுமன்றுக்குள் அனுமதிப்பதில் ஆளுங்கட்சிக்குள் கருத்து வேறுபாடும் நிலவுகிறது.
இந்நிலையில் சட்ட வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment