20: கட்சித் தலைவர்களுடன் கூடி ஆராய்ந்த பின்னர் முடிவு - sonakar.com

Post Top Ad

Thursday, 17 September 2020

20: கட்சித் தலைவர்களுடன் கூடி ஆராய்ந்த பின்னர் முடிவு



20ம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கூடி ஆராயவுள்ளதாக தெரிவிக்கிறது அரச தரப்பு.


உத்தேச திருத்தச் சட்டத்துக்கு ஏலவே ஆளுங்கட்சியினர் அங்கீகாரம் வழங்கி விட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் சர்வாதிகார ஆட்சியின் பால் மீள்வது தொடர்பில் பெருமளவு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையிலேயே இது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment