அரசு முன் வைத்த 20ம் திருத்தச்சட்ட வரைபை ஆராய புதிதாக குழுவொன்று நியமிக்கப்படுவதிலிருந்து குறித்த சட்டத் திருத்தத்தை தயாரித்தது யார் என அமைச்சரவைக்கும் தெரியாது என்பது உறுதியாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார் இரான் விக்ரமரத்ன.
உத்தேச வரைபு பெருமளவு விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் அதனை ஆராய்வதற்கு பிரதமர் புதிய குழுவொன்றை நியமித்துள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
அவ்வாறாயின், இதற்று முன் அது யாருக்கும் தெரியாமலேயே தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை நிறைவேற்றுவதற்கும் கண்ணை மூடிக் கொண்டே எல்லோரும் அனுமதியளிக்கப் போவதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment