20ம் திருத்தச் சட்ட வரைபில் உள்ள குறைபாடுகளை அலசுவதற்கு விசேட குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சட்ட வரைபு சர்வாதிகார ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதோடு ராஜபக்ச குடும்பத்தினரின் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக பெருமளவில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. இதேவேளை, சமகி ஜன பல வேகய நீதிமன்றம் செல்லப் போவதாகவும் தெரிவிக்கின்றது.
இந்நிலையிலேயே குறைபாடுகளை அலச விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment