19ம் திருத்தச் சட்டத்தில் நடைமுறை அரசு மாற்றங்களைக் கொண்டு வர முயல்கின்ற நிலையில் 2015ல் குறித்த திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்ந்தும் பேணப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் 20ம் திருத்தச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் ஜனாதிபதியின் பதவிக் கால எல்லையும் 19ன் அடிப்படையில் தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், ஏனைய அனைத்து முக்கிய சட்டத்திருத்தங்களையும் நீக்குவதற்கே அரசு முயற்சி செய்வதாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அண்மைக்காலமாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment