20ம் திருத்தச் சட்ட வரைபு நாட்டை மீண்டும் முழுமையான சர்வாதிகாரத்துக்குள் தள்ளி ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் விசனம் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், இதனையெதிர்த்து சமகி ஜன பலவேகய நீதிமன்றம் செல்வதற்கும் தயாராகவுள்ளதாக தெரிவிக்கிறது. இச்சூழ்நிலையில் தற்போது இப்போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர் ருவன் விஜேவர்தன தெரிவிக்கிறார்.
19ம் திருத்தச் சட்டம் ஊடாக மக்களுக்குக் கிடைக்கப் பெற்ற ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க அனைவரும் அணி திரள வேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment