20ம் சட்டத்திருத்த வரைபு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது இலங்கையை மன்னராட்சி முறைமைக்குக் கொண்டு செல்லும் திட்டமாக இருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளது சமகி ஜனபல வேகய.
இப்பின்னணியில் அதனை தோற்கடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யப் போவதாகவும் நீதிமன்றை நாடப்போவதாகவும் அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்து, சர்வாதிகார ஆட்சிக்குள் நாட்டைக் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது எனவும் கட்சி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment