ஆளுங்கட்சி முன் வைத்துள்ள 20ம் திருத்தச் சட்ட வரைபில் காணப்படும் குறைபாடுகள் பற்றி பகிரங்கமாக கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்தவிடம் கட்சி மட்டத்தில் விசாரணை நடாத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான கடிதம் ஒன்று கட்சியின் செயலாளரால் பிரேமநாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய இலங்கை தொடர்பிலான சரத்துக்கள் 20ம் திருத்தச் சட்டத்தில் இல்லாதிருப்பது ஏன் என அவர் ஆளுங்கட்சி சந்திப்பில் வைத்து கேள்வியெழுப்பியதன் பின்னணியிலேயே இவ்விசாரணை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment