69 லட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்துக் கொண்டுள்ள அரசாங்கம் தற்போது முன் வைத்துள்ள 20ம் திருத்தச் சட்டத்தை தேர்தலுக்கு முன்பாகவே மக்களுக்குச் சொல்லியிருந்தால் அந்த அளவு வாக்குகளை வென்றிருக்க முடியாது என தெரிவிக்கிறார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய.
பெரமுன அரசு முன் வைத்திருக்கும் 20ம் திருத்தச் சட்டம், மன்னராட்சி போன்ற முறைமையை வழி வகுக்கும் என ஏலவே எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், நாட்டின் அனைத்து பிரஜைகளின் அடிப்படை உரிமைகளையும் தனி நபரிடம் கையளிப்பதே 20 என விளக்கமளித்துள்ளார் கரு.
இந்நிலையில், இதனை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி அபிப்பிராயம் அறியப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment