20ம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது எனவும் சட்டத் திருத்தத்தை தெளிவுபடுத்தி மக்கள் அபிப்பிராயம் அறியப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இதற்கு சார்பாக இதுவரை 12 வழக்குகள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் தென் மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னக்கோனும் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளதுடன் அபிப்பிராய வாக்கெடுப்பை வலியுறுத்தி தீர்ப்பளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைத்து வழக்குகளிலும் சட்டமா அதிபரே பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை அரசு, 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் எனும் முனைப்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment