வெள்ளிக்கிழமை இரவு பங்களதேஷ் தலை நகர் டாக்கா அருகே நுராயேங்குன் பகுதியில் இயங்கி வரும் பள்ளிவாசல் ஒன்றில், வாயுக்கசிவினால் ஏற்பட்டதாகக் கருதப்படும் வெடிப்பு சம்பவத்தில் வபாத்தானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இஷாத் தொழுகை நேரத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவம், மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்து மீண்டும் இணைப்பு ஏற்பட்ட வேளையில் குளிரூட்டி ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் ஏற்பட்டிருக்கலாம் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எரி காயங்களுடன் 7 வயது குழந்தையொன்று உட்பட 17 பேர் வபாத்தாகியுள்ளதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment