இலங்கை - இந்தியா இடையே பௌத்த உறவை மேம்படுத்த 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை தருவதாக வாக்குறுதியளித்துள்ளார் இந்திய பிரதமர் மோடி.
இரு நாட்டு பௌத்த சமூகங்களுக்கிடையிலான கலாச்சார, சமய ரீதியிலான தனி மனித உறவுகளை மேம்படுத்தவும் பௌத்த முக்கியத்துவம் வாய்ந்த தளங்களை புனர்நிர்மாணம் செய்யவும் இந்நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக மோடி விளக்கமளித்துள்ளார்.
இப்பின்னணியில் இலங்கையின் பௌத்த துறவிகளுக்கும் - இந்திய பௌத்த துறவிகளுக்குமிடையிலான தொடர்புகளைவும் வலுப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment