போலி விசாவில் கனடா செல்ல முயன்ற 12 பேர் கொண்ட குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பத்தரமுல்லயில் மொழிப்பயிற்சி மற்றும் விசா உதவிகள் வழங்குவதற்கான மையம் ஒன்றை நடாத்தி வந்த பெண்ணொருவரின் தலைமையிலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உள்ளடங்கலான குழு போலி விசாவில் கட்டார் ஊடாக கனடா செல்ல முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் தவிர ஏனையோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment