தற்போது தேங்காயின் விலை அதிகரித்து வரும் நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதமளவில் தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபா வரையில் அதிகரிக்கும் என, தெங்கு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது தேங்காய் ஒன்றின் விலை 70 முதல் 85 வரை காணப்படுகிறது. மாதமொன்றிற்கு 250 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படுவதோடு, அதில் சுமார் 150 மில்லியன் வரை நுகர்வோரின் பாவனைக்கு பயன்படுத்தப்படுகிறது.
எவ்வாறாயினும், கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, தெங்கு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெங்கு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
-ஐ. ஏ. காதிர் கான்
1 comment:
நான் விளையாட்டிற்கு சொல்லலங்க. இப்ப என்ன கெட்டுப்போச்சு எங்கட ஊர்ல இன்னிக்கு கூட ஒரு தேங்காய் 100 ரூபாய்ங்க. நவம்பரில் எப்படியும் 110க்காவது வரும். நீங்க எல்லாம் எங்கட ஊருக்கு அள்ளிப்பிடிச்சிக் கொண்டு தேங்காய் பிசினசுக்கு வந்துடுவீங்கன்னுதான் எங்கட ஊர்ட பெயரைச் சொல்லல.
Post a Comment