வெளிநொடொன்றுக்கு கடத்துவதற்காக தயார் படுத்தப்பட்டதாக கருதப்படும் 10 கிலோ தங்கத்தைக் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் பொலிசார்.
புத்தளம், பாலாவி பிரதேசத்தில் வாகனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாகவும் 34 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வாகனத்திலிருந்து தங்கம் மீட்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment