ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு, கட்சித் தலைமைப் பதவியை ஏற்கத் தான் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய.
இக்கட்டான இக்கால கட்டத்தில் தேவைப்படும் தியாகத்தைச் செய்து கட்சியை மீளக் கட்டியமைக்கத் தான் தயாராக இருப்பதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் படு தோல்வியடைந்துள்ள நிலையிலும் கட்சித் தலைமைத்துவத்தை உடனடியாக விட்டுச் செல்ல ரணில் தயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment