தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து ஒதுங்கியிருந்த போதிலும் தொடர்ந்தும் அரசியல் கருத்துக்கள் வெளியிட்டு வரும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், அவரைக் கட்சியின் பொதுச் செயலாளராக்கி கட்சியை மீண்டும் வளர்த்தெடுப்பதற்கான திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்து ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறிய போதிலும் மங்கள சமரவீர தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment