தேர்தலில் படு தோல்வியடைந்த நிலையில் தேசிய ரீதியில் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பிலான இழுபறி இன்னும் முடிவுக்கு வராத நிலையில் கட்சி முக்கியஸ்தர்கள் விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
தற்சமயம் ஐக்கிய தேசியக் கட்சியே தேசியப் பட்டியல் நியமனத்தை அறிவிக்காமல் உள்ளது. அபே ஜன பல கட்சியின் நியமனம் உட்கட்சி மோதலுக்குள்ளாகியுள்ள போதிலும் ஏலவே அக்கட்சியின் செயலாளர் தனது பெயரை முன்மொழிந்து கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
இன்று 14ம் திகதியே தேசியப்பட்டியல் நியமனங்களை அறிவிப்பதற்கான இறுதி நாளாகும்.
No comments:
Post a Comment