ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகிக் கொள்ளத் தயார் என தெரிவித்துள்ள நிலையில் அப்பதவிக்கு போட்டியிட பலரின் பெயர்கள் முன் மொழியப்பட்டுள்ளது.
ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், தயா கமகே, வஜிர அபேவர்தனவுடன் நவின் திசாநாயக்க, ருவன் விஜேவர்தன மற்றும் பாலித ரங்கே பண்டாரவும் பட்டியலில் இணைந்துள்ள நிலையில் இன்னும் பல கட்ட கூட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் தாம் விலகத் தயார் என ரணில் விக்கிரமசிங்க பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment