ஐக்கிய தேசியக் கட்சி - சமகி ஜனபல வேகய பிளவை சீர் செய்து மீண்டும் ஒரே கட்சியாகப் பயணிப்பதற்கான தீவிர முயற்சிகளை திஸ்ஸ அத்தநாயக்க மேற்கொண்டு வருகிறார்.
இப்பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் சந்தித்து அவர் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளதாக அறியமுடிகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கத் தயார் என கரு ஜயசூரிய அறிவித்திருந்த அதேவேளை அதனை சமகி ஜனபல வேகயவும் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment