இன்று முதல் கொழும்பு சிறைச்சாலைகளுக்கு விசேட அதிரடிப் படை பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை விசேட அதிரடிப்படையினரையும் ஈடுபடுத்தும் அடிப்படையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் விளக்கமளித்துள்ளார்.
அண்மைக்காலமாக சிறைச்சாலைகளுக்குள் கைத்தொலைபேசி, போதைப்பொருள் உட்பட பொருட்கள் கடத்திச் செல்லப்படுவது அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டு வரும் நிலையில் இவ்வேற்பாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment