SJBக்குள் 'தேசியப் பட்டியல்' முரண்பாடு! - sonakar.com

Post Top Ad

Saturday, 8 August 2020

SJBக்குள் 'தேசியப் பட்டியல்' முரண்பாடு!


சமகி ஜனபல வேகய எனும் பெயரில் சிறுபான்மை சமூக கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட சஜித் அணி இம்முறை பொதுத் தேர்தலில் 7 தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெற்றுள்ளது. எனினும், அதில் தமக்கான போதிய பங்கு இல்லையென முஸ்லிம் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக தமக்கொரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ள முனைந்து வரும் அதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தலுக்குப் பின் புதிய கதைகள் பேசுவதாக அதிருப்தி வெளியிட்டுள்ளது. கிடைத்திருக்கும் 7 ஆசனங்களை எதிர்கால அரசியலுக்குப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என இக்கட்சிகள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவினால் ஏமாற்றப்பட்டது போன்றல்லாது தான் கட்டாயம் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியை நாடாளுமன்ற உறுப்பினராக்குவேன் எனவும் தேர்தலுக்கு முன்பு வாக்களித்திருந்த சஜித் பிரேமதாச தற்போது, தமக்கு கட்சியை வழங்கிய நபருக்கு அந்த வாய்ப்பினை வழங்குவதற்கு முயல்வதாகவும் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசிக்காது தன்னிச்சையாக முடிவெடுக்க முனைவதாகவும் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்ற அதேவேளை ஓகஸ்ட் 20ம் திகதிக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment