இடைக்கால வரவு-செலவுத் திட்டம் எனும் பெயரில் மேலும் ஆயிரக்கணக்கான பில்லியன்களைக் கடன் பெறுவதற்கே அரசாங்கம் திட்டமிடுவதாக தெரிவிக்கின்ற எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய, நிதி ஒதுக்கீட்டின் 36 வீதத்தினை நால்வர் பகிர்ந்து கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ளது.
சுமார் 2000 பில்லியன் ரூபா கடன் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டம் தொடர்பில் போதுமான விளக்கம் தரப்பட வேண்டும் என சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
சில காலத்துக்கு இவ்வாறு இடைக்கால வரவு - செலவுத் திட்டத்திலேயே அரசை நிர்வகிக்கப் போவதாக பெரமுன தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment