நீண்ட அனுபவமும் ஆற்றலும் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே அக்கட்சிக்குக் கிடைக்கப் பெற்றுள்ள தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என சஜித் அணியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் குரல் எழுப்பியுள்ளனர்.
படுதோல்வியைத் தழுவி துவண்டு போயுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் தலை தூக்குவதற்கான ஒரே வழி சமகி ஜனபலவேகயவுடன் இணைந்து கொள்வதுதான் என சஜித் அணியின் முக்கியஸ்தர்களா முஜிபுர் ரஹ்மான், நலின் பண்டார போன்றோர் தெரிவிக்கின்றனர்.
தாமே உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியினர் எனவும் சமகி ஜன பல வேகயவின் ஜே.சி. அலவத்துவல தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment