சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பல வேகயவும் பொதுத் தேர்தலில் படு தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சியும் விரைவில் ஒன்றிணையும் சாத்தியம் இருப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார் ருவன் விஜேவர்தன.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் பின்னணியில் இரண்டாகப் பிளவுற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களும் பாரிய அளவில் இம்முறை தேர்தலை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இளைய தலைமுறை தலைவர் ஒருவர் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அதனோடு சஜித் தரப்பு இணையும் எனவும் ருவன் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment