சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரராக பதவியுயர்வு பெற்று விடைபெற்றுச் செல்லும் முன்னாள் மத்திய மாகாண டி.ஐ.ஜியாக பணியாற்றிய டி.ஆர்.எல் ரணவீரவுக்கு கண்டி முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் பாராட்டு மற்றும் பிரியாவிடை நிகழ்வொன்றை நடாத்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்துள்ளனர்.
2018 முதல் மத்திய மாகாணத்தில் பணியாற்றிய ரணவீரவுக்கு இன்றைய தினம் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண பொலிஸ் மாதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவர் மௌலவி பஸ்லுர் ரஹ்மான் தலைமையில், தேசபந்து அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவை தேசிய தலைவர் சஹீத் எம்.ரிஸ்மிஇ கண்டி மஸ்ஜித் சம்மேளன தலைவர் கே.ஆர்.ஏ.சித்தீக்இ அகில இலங்கை மொத்த வியாபார சங்க தலைவர் டபிள்யூ. எம். நாஜிம்இ கண்டி வர்த்தக சங்க பிரதிநிதி ஐ.அலிகான் மற்றும் கண்டி சிக்ஸ் வை தலைவர் ஏ.எஸ்.எம்.கஸ்ஸாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
-இக்பால் அலி
No comments:
Post a Comment