அபே ஜன பல கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஞானசாரவுக்கே செல்ல வேண்டும் என ஆதரவுக்குரல் எழுப்பியுள்ளார் முன்னாள் அத்துராலியே ரதன தேரரின் சகா ஒமல்பே சோபித்த தேரர்.
நாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் குறித்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தனதாக்கிக் கொண்ட விமலதிஸ்ஸ தேரர் தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், குறித்த பதவியைப் பெற நீதிமன்றை நாடப் போவதாக அத்துராலியே ரதன தேரர் தெரிவித்துள்ள அதேவேளை ஞானசார குழு கடத்தல், அடி தடியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment