அபே ஜன பல கட்சியின் தேசியப்பட்டியல் விவகாரம் நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் அத்துராலியே ரதன தேரர்.
குறித்த கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் நியமனத்துக்காக அத்துராலியே ரதன தேரரும் ஞானசார தேரரும் முறுகலில் ஈடுபட்டிருந்த நிலையில் அக்கட்சியின் செயலாளராக இருந்த விமலதிஸ்ஸ தேரர், தனது பெயரை முன்மொழிந்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், அவரை விலக்கிய கட்சி நிர்வாகம், ஞானசாரவை முன்மொழிவதாக ஊடகங்களில் தெரிவித்திருந்தது. இப்பின்னணியில் சட்டமா அதிபரின் ஆலோசனைய தேர்தல் ஆணைக்குழு நாடியிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள சட்டமா அதிபர், அக்கட்சியின் செயலாளர் என யார் தேர்தல் ஆணைக்குழுவில் பதியப்பட்டுள்ளாரோ அவரது முன்மொழிவே செல்லுபடியாகும் என விளக்கமளித்துள்ளார்.
இப்பின்னணியில் விமலதிஸ்ஸ தேரர் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதியாகியுள்ள அதேவேளை, அவரை பின்னணியில் இருந்து இயக்குவதாக ஞானசாரவால் சந்தேகிக்கப்படும் ரதன தேரர் நீதிமன்றம் செல்லத் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment