MP ஆவதற்கு 'மரண தண்டனை' தடையில்லையென விளக்கம் - sonakar.com

Post Top Ad

Monday, 10 August 2020

MP ஆவதற்கு 'மரண தண்டனை' தடையில்லையென விளக்கம்


2015 தேர்தல் காலத்தில் கட்சிப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்ததன் பின்னணியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர இம்முறை பொதுத் தேர்தலில் ரத்னபுர மாவட்டத்தில் வெற்றியீட்டியுள்ளார்.


இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையால் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது என எந்த சட்டச் சிக்கலும் இல்லையென நாடாளுமன்ற செயலாளர் விளக்கமளித்துள்ளார்.


மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பான விபரங்களை கையளித்தால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொலைக் குற்றச்சாட்டுடன் சிறையில் இருக்கும் பிள்ளையானும் இம்முறை தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment