2020 பொதுத் தேர்தலில் படு தோல்வியடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்திருக்கும் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனம் ஊடாக யாரை நாடாளுமன்றுக்கு அனுப்புவது என்பது தொடர்பில் திங்கட் கிழமை கூடி முடிவெடுக்கப் போவதாக தெரிவிக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி.
எனினும், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு செல்லப் போவதில்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச பிரிந்து சென்றதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்த 5 மில்லியன் வாக்குகள் 2.6 மில்லியனாகக் குறைந்து விட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியை அவர் நாசமாக்கி விட்டதாகவும் ஐ.தே.க பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இப்போதாவது ஐக்கிய தேசியக் கட்சியை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தலில் 54 ஆசனங்களை வென்றுள்ள நிலையில் சமகி ஜன பல வேகய தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment