69 லட்சம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை விட அதிகாரமுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களை கலைப்பதற்கான பெரமுனவின் நிலைப்பாட்டுக்கு மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் அங்கீகாரம் தந்துள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ஜி.எல். பீரிஸ்.
இந்நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியையும் விட சக்தி வாய்ந்த குழுக்களாக 19ம் திருத்தச் சட்டம் ஊடாக உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்கள் கலைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவிக்கிறார்.
ஆட்சி மாறினாலும், சுயாதீன ஆணைக்குழுக்களில் உள்ளவர்களை மாற்ற முடியாத அடிப்படையில் அவை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான குழுக்களில் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு சோரம் போகிறவர்களாக இருக்கும் போது அது நாட்டுக்கு ஆபத்து எனவும் ஜி.எல். விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment