நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பெரமுன தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரிக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக தெரிவிக்கிறது சிங்ஹலே அமைப்பு.
அலி சப்ரியை குறித்த பதவிக்கு நியமித்ததன் ஊடாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அமைப்பின் தலைவர் மெதில்லே பஞ்சாலோக்க தேரர் தெரிவிக்கிறார்.
தனக்கெதிரான வழக்கொன்றில் அலி சப்ரி ஆஜராகியுள்ளதால் அவர் நீதியமைச்சராக இருந்தால் அது தன்னைப் பாதிக்கும் என தேரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment